‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’ படத்தின் கதை தன்னுடைய ‘இன்று போய் நாளை வா’ படத்தின் ரீமேக் என கே. பாக்யராஜ் ஏற்கெனவே குற்றம் சாட்டி இருந்தார்.
டிவி பேட்டிகளில் சந்தானம் இந்த படம் ‘இன்று போய் நாளை வா’ படத்தின் ரீமேக்தான் எனவும், இராம. நாராயணன் படத்தின் கதை உரிமையைப் பெற்று தயாரிப்பதாகவும் சந்தானம் கூறியதாக பாக்யராஜ் குற்றம் சாட்டினார்.
‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’ படத்தை சந்தானத்தின் ஹேன்ட் மேட் பிலிம்ஸ் நிறுவனமும், இராம. நாராயணனின் ஶ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளது.
பொங்கலுக்கு வெளிவந்த இந்த படம் மாபெரும் வெற்றி பெற்றுள்ளது என்பகு குறிப்பிட்த்தக்கது.
இது தொடர்பாக, ஏற்கெனவே இராம.நாராயணன், கதை எழுத்தாளர்கள் சங்கம், தயாரிப்பாளர்கள் சங்கம் ஆகியோருக்கு கடிதம் எழுதியதாக பாக்யராஜ் கூறியிருந்தார். தொடர்ந்து சென்னை போலீஸ் கமிஷனரிடமும் மனு ஒன்றை அளித்திருந்தார்.
அது குறித்து எந்த வித முடிவும் ஏற்படாததால் தற்போது ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’ படத்தின் கதை உரிமை தொடர்பாக சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருக்கிறார்.
இது தொடர்பாக கே. பாக்யராஜ் தாக்கல் செய்துள்ள மனுவில், ”கதைக்கான உரிமையை சட்டப்படி வாங்காமலேயே இராம. நாராயணன், சந்தானம் ஆகியோர் பயன்படுத்தி, பெயரை மட்டும் மாற்றி , அதை வைத்து மற்றொரு படத்தைத் தயாரித்திருப்பது, காப்பிரைட் சட்டம் மற்றும் இந்திய தண்டனை சட்டப்படி குற்றமாகும்.
எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை போலீஸ் கமிஷனரிடமும் மனு கொடுத்தேன். இது வரை எந்த நடவடிகையும் , விசாரணையும் மேற்கொள்ளவில்லை. எனவே எனது புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்து, தகுந்த நடவடிகை எடுக்க உத்தரவிட வேண்டும், ” என கேட்டுக் கொண்டுள்ளார்.
இம் மனு மீது விரைவில் விசாரணை வரும் எனத் தெரிகிறது.