”Kadhal Cappucino” என்ற இசை ஆல்பம் காதலர் தினத்தன்று வெளியிடப்பட்டுள்ளது.
இந்த டிஜிட்டில் இசை ஆல்பத்தை SA RE GA MA Music Online நிறுவனம் வெளியிட்டிருக்கிறது.
இந்த ஆல்பத்தைத் தயாரித்து, இசையமைத்துப் பாடி மற்றும் நடித்து வெளியிட்டிருப்பவர் ரோனி தாமஸ். ‘நில், கவனி, செல்லாதே’ திரைப்படத்தில் நடித்த லக்ஷ்மி நாயர் இதில் நடித்திருக்கிறார்.
இந்த இசை ஆல்பத்தின் இயக்குனர் – சுந்தர் , பாடல் எழுதியிருப்போர் – செல்வராஜ் மற்றும் பாலச்சந்தர், ஒளிப்பதிவு – அன்புசத்யன், எடிட்டிங் – கௌகின்.
இந்த ஆல்பத்தை எழுதி இசையமைத்ததற்கு வெறும் 15 நிமிடங்களே ஆனதாக இதன் தயாரிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த ஆல்பம் SA RE GA MA Music Online இணைய தளத்திலும் வெளியாகியுள்ளது.