சற்குணம் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் ‘நய்யாண்டி’ படத்தில் மலையாள நடிகையான நஸ்ரியா நஜீம் ஹீரோயினாக அறிமுகமாகிறார்.
இவர் குழந்தை நட்சத்திரமாக திரையுலகிற்கு அறிமுகமாகி கதாநாயகியாக உயர்ந்தவர். தமிழில் பாசில் இயக்கி, ஶ்ரீகாந்த், சோனியா அகர்வால் நடித்த ‘ஒரு நாள் ஒரு கனவு’ திரைப்பட படத்திலும் நடித்திருந்தார்.
மலையாளத்தில் ஓரிரு படங்களில் கதாநயாகியாக நடித்த பின் தமிழில் கதாநாயகியாக அறிமுகமாகிறார்.
இயக்குனர் சற்குணம் அவருடைய முதல் படமான ‘களவாணி’யில் மலையாளத்திலிருந்து ஓவியாவை அறிமுகப்படுத்தினார். அடுத்த படமான ‘வாகை சூட வா’வில் இனியாவை அறிமுகப்படுத்தினார். இப்போது நஸ்ரியாவை அறிமுகப்படுத்துகிறார்.
மலையாள நடிகைகள் மீது சற்குணத்திற்கு அவ்வளவு காதல் போல….