இயக்குனர் மிஷ்கின் அவருடைய சொந்த தயாரிப்பு நிறுவனமான Lone Wolf சார்பில் தயாரிக்கப் போகும் படம் ‘ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’.
இந்த படத்தின் விளம்பரங்களை கடந்த சில நாட்களாக நாளிதழ்களில் கொடுத்து வருகிறார். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அறிவிப்பு என வந்து கொண்டிருக்கிறது.
ஞாயிறு அன்று அவருடைய பட நிறுவனத்தைப் பற்றிய விளம்பரம், நேற்று படத்தின் பெயர், இன்று இசையமைக்கப்ப போவது இளையராஜா என்ற விளம்பரம் வந்துள்ளது. ஆனால், முன்னணி இசை கோர்ப்பு என்று குறிப்பிட்டிருக்கிறார்.
இளையராஜா இசையில் மிஷ்கின் இயக்கி நடித்து வெளிவந்த ‘நந்தலாலா’ திரைப்படம் கால தாமதமான வெளியீட்டால் ரசிகர்களை சரியாக சென்றடையாமல் போய்விட்டது. நந்தலாலாவின் பின்னணி இசையில் பிரமாதப்படுத்தியிருந்தார் இளையராஜா. ஒரு இடைவெளிக்குப் பிறகு மீண்டும் இளையராஜாவுடன் இணைகிறார் மிஷ்கின்.
நாளை படத்தில் நடிக்கும் நடிகர்களைப் பற்றிய விளம்பரம் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மணிரத்னம் மாதிரி விளம்பரம் பண்றது தப்பில்லை, ஆனால் ‘கடல்’ போல நம்பியிருக்கோம், ஏமாத்தாம இருந்தால் சரி…