தெலுங்கில் முன்னணி நடிகையாகவும், தமிழில் வளர்ந்து வரும் நடிகையாகவும் இருப்பவர் சமந்தா.
‘பாய்ஸ்’ படத்தில் அறிமுகமாகி இப்போது சில தமிழ்ப் படங்களில் ஹீரோவாக நடித்து வருபவர் சித்தார்த்.
இவர்கள் இருவரும் இணைந்து நடித்த தெலுங்குப் படமான ‘ஜபர்தஸ்த்’ இன்னும் ஒரு சில நாட்களில் வெளியாக இருக்கிறது.
இதனிடையே இருவருக்குமான காதல் நிஜம்தான் என்றும், விரைவில் இருவரும் திருமணம் செய்து கொள்ளப் போகிறார்கள் என்றும் தெலுங்கு திரையுலகில் பரவலாகப் பேசப்பட்டு வருகிறது.
இது குறித்து ஒரு பேட்டியில் கருத்து தெரிவித்துள்ள சித்தார்த், ”என் சொந்த வாழ்க்கையைப் பற்றிய விவரங்களை மீடியாவிற்கு பகிர்ந்து கொள்ள மாட்டேன். என் திருமணத்தைப் பற்றி என்னுடைய பெற்றோர் முடிவெடுப்பார்கள். எனவே இதைப் பற்றி பொதுப்படையாகவும், மீடியா முன்னும் பேச வேண்டிய அவசியமில்லை, ” என்று கூறியுள்ளார்.
சமந்தாவுடனான காதலை அவர் மறுக்கவுமில்லை, ஏற்கவுமில்லை என ஆந்திர மீடியாக்கள் செய்தி வெளியிட்டுள்ளன.