டாப்ஸீ தங்கையும் நடிக்க வருகிறார்….

tapsee-and-shagun‘ஆடுகளம்’ படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானவர் டாப்ஸீ. தொடர்ந்து இவர் வெற்றிப் படங்களில் நடிக்கவில்லை என்றாலும் ஒரு பரபரப்பான நடிகையாகவே இருந்து வருகிறார்.

தற்போது விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அஜித் நடிக்கும் படத்தில் மற்றொரு நாயகியாக நயன்தாராவுடனும், முனி – 3 படத்திலும் நடித்து வருகிறார்.

தெலுங்கில் தொடர்ந்து முன்னணி நடிகைகளுள் ஒருவராக இருந்து வருகிறார்.

இப்போது இவருடைய தங்கை ஷாகுன்-ஐ ஹீரோயினாக்கும் முயற்சியில் இருக்கிறார்.

கல்லூரிப் படிப்பை முடித்து விட்டு ஷாகுன் வேலையில் இருந்து வருகிறாராம். இவருக்கும் அக்கா போலவே நடிக்க ஆசை. விரைவில் நல்ல படம், நல்ல ஹீரோவாக பார்த்து அறிமுகப்படுத்தப் போகிறாராம் டாப்ஸீ.

இன்னொரு ‘வெள்ளாவி’ வச்சி வெளுத்த ஹீரோயின் ரெடி….

Read Previous

டி.ஆர் – ‘தாடி’ ரகசியம்…

Read Next

‘தலைவா’ – விஜய்க்கு வில்லன் விஜய்