‘ஆல் இன் ஆல்…’ ஆரம்பமானது…

biriyaniகார்த்தி, காஜல் அகர்வால், சந்தானம் நடிப்பில் ராஜேஷ் இயக்கும் ‘ஆல் இன் ஆல் அழகுராஜா’ படம் ஆரம்பமானது.

கார்த்தி வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் ‘பிரியாணி’ படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போதே இப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமானது பல சர்ச்சைகளைக் கிளப்பியது.

சிலர் ‘பிரியாணி’ படத்தை பாதியிலேயே நிறுத்தி விட்டார்கள் என்றெல்லாம் கூட எழுத ஆரம்பித்து விட்டார்கள். ஆனால், அனைத்து வதந்திகளுக்கும் ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் முற்றுப்புள்ளி வைத்து விட்டது.

கார்த்தி ஒரே சமயத்தில் ‘பிரியாணி’, ‘ஆல் இன் ஆல் அழகுராஜா’ ஆகிய இரண்டு படங்களிலும் நடிப்பார் என தெரிவித்து விட்டார்கள்.

உண்மையிலேயே ஏதாவது பிரச்சனை என்றால் போகப் போகத் தெரிந்து விடும், அது வரை பொறுத்திருப்போம்…

Read Previous

ரஜினி ரசித்த ‘கோச்சடையான்’ – சிறப்புச் செய்தி

Read Next

கமலுக்கு வீடு கிடைக்குமா ?