போலிகளைக் கண்டு ஏமாறாதீர் – சசிகுமார் வேண்டுகோள்

sasikumarஇயக்குனர் எம். சசிகுமார் அடுத்து எடுக்க இருக்கும் படத்தில் நடிக்க வாய்ப்புத் தருவதாகச் சொல்லி, போலி ஈ-மெயில் முகவரிகளை வைத்தும்,   வலைத் தளங்களை வைத்தும் சிலர் ஏமாற்றி வருகிறார்கள், அப்படிப்பட்ட வலைத் தளங்களை நம்பி ஏமாற வேண்டாம் என, இயக்குனரும் நடிகருமமான சசிகுமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

“சமீபத்தில் என் பெயரைச் சொல்லி சிலர் சினிமா வாய்ப்புத் தருவதாக சிலரைத் தொடர்பு கொண்டு பேசி இருக்கிறார்கள். எப்போதுமே என்னுடைய படங்களுக்கு ஆட்களைத் தேர்வு செய்யும் போது நேரடியாக என் கம்பெனிக்கே அழைத்துப் பேசுவதுதான் வழக்கம்.

போனிலோ, ஈ மெயில் மூலமாகவோ தொடர்பு கொள்ளும் வழக்கம் கிடையாது. என் பெயரில் போலி ஈ மெயில் முகவரிகளையும், பேஸ்புக், ட்விட்டர் கணக்குகளையும் சிலர் ஆரம்பித்திருக்கிறார்கள்.

இதுநாள் வரை எந்த சமூக வலைத் தளங்களிலும் நான் இல்லை. அதனால் வலைத் தளத் தகவல்களையோ, ஈ மெயில்களை வைத்தோ என் படத்தில்  வாய்ப்பு கொடுப்பதாக  சொல்லப்படுவதை யாரும் நம்ப வேண்டாம்.

குறிப்பாக , சினிமாவை நோக்கி வரும் பெண்கள் இந்த விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். காரணம், சினிமா உலகம் எந்த அளவுக்கு அழகானதோ, அதே அளவுக்கு ஆபத்தானதும கூட.

சினிமாவை நோக்கி வருபவர்கள் ஜெயிக்கிறார்களோ, இல்லை போராடுகிறார்களோ, எந்த விதத்திலும் அவர்கள் ஏமாற்றப்பட்டுவிடக் கூடாது என நினைப்பவன் நான்.

என்னுடைய பெயரை வைத்தே சிலர் ஏமாற்று வலை விரிப்பது, எனக்கு மிகுந்த வருத்தத்தையும் அதிர்ச்சியையும் அளிக்கிறது.

சினிமாவில் பெண்களின் சாதிப்புகளுக்கு வாய்ப்புகள் கொட்டிக் கிடக்கின்றன. ஆனால், அந்த இலக்கை அடைவதற்கு ஆர்வமும் அவசரமும் மட்டுமே இருந்தால் போதாது, ஆராய்ந்து பார்க்கும் பக்குவமும் இருக்க வேண்டும்,” என கூறியுள்ளார்.

Read Previous

சந்தானம் ஜோடியாக ஹிந்தி நடிகை ?

Read Next

CSK – நாயகியைப் புகழும் இயக்குனர்…