இன்று மார்ச் 8ம் தேதி வெளியாகும் தமிழ்த் திரைப்படங்கள்…
சுண்டாட்டம்
பிலிம் ஃபேம் தயாரிப்பில் பிரம்மா ஜி. தேவ் இயக்கியிருக்கும் படம். இசை – பிரிட்டோ, பின்னணி இசை – அச்சு, இர்ஃபான், அருந்ததி, மது, ஸ்டாலின், ஆடுகளம் நரேன், சென்ராயன் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.
மதில் மேல் பூனை
பீனிக்ஸ் கிரியேஷன்ஸ் கண்ணன் தயாரிப்பில் பரணி ஜெயபால் இயக்கியிருக்கும் படம். இசை – கணேஷ் ராகவேந்திரா, விஜய் வசந்த், விபா நடராஜன், தம்பி ராமையா நடித்திருக்கிறார்கள்.
ஒன்பதுல குரு
காஸ்மோ பாஸ் பிலிம்ஸ் தயாரிப்பில் பி.டி. செல்வகுமார் இயக்கத்தில் கே இசையமைத்திருக்கும் படம். வினய், லட்சுமி ராய், பிரேம்ஜி, சத்யன், அரவிந்த் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.
பதவி
செவன்த் சென்ஸ் தயாரிப்பில் தேவா. கே இயக்கியுள்ள படம் . இசை – மகேஷ் சங்கர், சாய்குமார், சர்வானந்த், சந்தீப், ரூபி பாரிக்கர் நடித்திருக்கிறாரகள். தெலுங்கிலிருந்து மொழி மாற்றம் செய்யப்பட்டுள்ள படம்.
பேசாமல் பேசினால்
ரெயின்போ கிரியேஷன்ஸ் தயாரிப்பில் என்.டி. சிவமனோகரன் இயக்கியிருக்கும் படம்.



