இன்று நடிகர், நடிகைகள் உண்ணாவிரதம்

sarathkumarதென்னிந்திய நடிகர் சங்கம் மற்றும் தமிழ் கலை உலகின் சார்பாக இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவு தெரிவித்து உண்ணாவிரதப் போராட்டம் இன்று நடக்கிறது.

தென்னிந்திய நடிகர் சங்க தலைவர் ஆர். சரத்குமார் தலைமையில் பொதுச் செயலாளர் ராதாரவி, பொருளாளர் வாகை சந்திரசேகர் முன்னிலையில் இலங்கையில் இனப் போரினால் பாதிக்கப்பட்ட நம் தொப்புள் கொடி உறவுகளாக நம் தமிழ் மக்களுக்கு பாதுகாப்பான, சுதந்திரமான நல்வாழ்விற்காக இன்று சென்னை, தியாகராயாக நகரில் உள்ள அபிபுல்லா சாலையில் உள்ள தென்னிந்திய நடிகர் சங்க வளாகத்தில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற உள்ளது.

இந்த போராட்டத்தில் தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை, தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம், கில்டு, திரைப்பட இயக்குனர்கள் சங்கம், தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் அதில் இணைக்கப்பட்ட  தொழிலாளர் சங்கங்கள், விநியோகஸ்தர்கள் சங்கம், திரையரங்க உரிமையாளர்கள் சங்கம், சின்னத்திரை தயாரிப்பாளர்கள் சங்கம் மற்றும் சின்னத்திரை கலைஞர்கள் கூட்டமைப்பு மற்றும் அதில் இணைக்கப்பட்ட சின்னத்திரை இயக்குனர்கள் சங்கம், சின்னத்திரை நடிகர்கள் சங்கம், சின்னத்திரை எழுத்தாளர்கள் சங்கம், பி.ஆர்.ஓக்கள் சங்கம், ஆகிய அனைத்து சங்கங்களும் கலந்து கொள்கின்றன.

தென்னிந்திய நடிகர்கள் சங்க உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் இப்போராட்டத்தில் கலந்து கொள்ள வேண்டுமென தென்னிந்திய நடிகர் சங்க தலைவர் ஆர். சரத்குமார், செயலாளர் ராதாரவி ஆகியோர் அழைப்பு விடுத்துள்ளனர்.

Read Previous

என்னை இயக்குனராக்கிய இளையராஜா – மணிவண்ணன்

Read Next

கார்த்தி, இயக்குனர் ஹரி இணையும் படம்