ஹீரோவாகும் ‘கொலை வெறி’ அனிருத்…

anirudh‘3’ திரைப்படத்தில் இடம் பெற்ற ‘ஒய் திஸ் கொலை வெறி’ பாடல் மூலம் ஒரே இரவில் உலகப் புகழ் பெற்றவர் இசையமைப்பாளர் அனிருத்.

தன்னை ‘ஒரு பட அதிசயம்’ (one film wonder) என்று சொல்லி விடக் கூடாதென கடுமையாகவே உழைத்து வருகிறாராம்.

‘டேவிட்’ படத்தில் இவர் இசையமைத்த பாடல்கள் ஹிட் வரிசையில் இடம் பெற்றாலும் படம் தோல்வியடைந்ததால் அதிகம் பேசப்படாமலே போய் விட்டது.

ஆனாலும், அந்த குறையை ‘எதிர் நீச்சல்’  கண்டிப்பாக போக்கிவிடும் என்று நம்புகிறார்.

இதனிடையே அனிருத்தும் ஒரு படத்தில் ஹீரோவாக நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார். விக்னேஷ் சிவா இயக்கும் இந்த படத்தை கௌதம் மேனன் தயாரிக்கிறார்.

இப்படத்தில் நடிப்பதைப் பற்றி அனிருத் கூறுகையில், “இசைதான் என்னுடைய முதல் காதல், அப்புறம்தான் நடிப்பு எல்லாம். இருந்தாலும் விக்னேஷ் சிவா சொன்ன கதையில் என் நிஜ வாழ்க்கைக்கு பொருத்தமான கதாபத்திரம் இருந்தது. எனவேதான் நடிக்க சம்மதித்தேன். நடிப்பு என் இசைப் பயணத்தை பாதித்து விடாது.

என்னுடன் ஜோடியாக நடிக்க யார் சம்மதிக்கிறார்களோ, அவருடன் நான் நடிக்க ரெடி. எனக்குப் பிடித்த நடிகை சுஷ்மிதா சென். ஆனால், அவர் இப்போது என்னுடன் ஜோடியாக நடித்தால் சரியாக இருக்காது, ”என ஜாலியாக கூறினார்.

வேண்டுமானால் ஆன்ட்ரியாவிடம் கேட்டுப் பாருங்களேன்….

Read Previous

அடுத்த காதல் ஜோடி ரெடி…?

Read Next

இசையமைப்பாளர் ராமமூர்த்தி மறைவு – முதல்வர் இரங்கல்