தென்னிந்திய திரைப்பட பத்திரிகை தொடர்பாளர் யூனியன் சார்பாக 7 மூத்த உறுப்பினர்களுக்கு மாதம் தோறும் ரூ.1000 உதவித் தொகை வழங்கப்படும் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது.
தென்னிந்திய திரைப்பட பத்திரிகை தொடர்பாளர் யூனியன் , பொதுக்குழு கூட்டம் சமீபத்தில் நடைபெற்றது. அப்போது முன்னாள் தலைவர் விஜயமுரளி மற்றும் சில உறுப்பினர்கள் மூத்த உறுப்பினர்களை கௌரவிக்கும் வகையில் உதவித் தொகை வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்கள்.
அதைத் தொடர்ந்து தற்போதைய தலைவரான டைமன்ட் பாபு 60 வயதைக் கடந்த மூத்த உறுப்பினர்களுக்கு, இந்த மாதம் முதலே ரூ.1000 உதவித் தொகை வழங்கப்படும் என்று தெரிவித்தார்.
7 மூத்த உறுப்பினர்களுக்கு ஏவிஎம். சரவணன் இந்த நிதி உதவி திட்டத்தை தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் யூனியன் உறுப்பினர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
