உதயநிதி நடிக்கும் புதிய படம்…

udhayanidhi-stalin‘ஒரு கல் ஒரு கண்ணாடி’ என்ற மாபெரும் வெற்றிப் படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானவர் ரெட் ஜெயன்ட் மூவீஸ் உதயநிதி ஸ்டாலின்.

இப்போது எஸ்.ஆர். பிரபாகரன் இயக்கத்தில் ‘இது கதிர்வேலன் காதல்’ என்ற படத்தில் நயன்தாராவுடன் ஜோடி சேர்ந்து நடித்து வருகிறார்.

இந்த படத்தையடுத்து இயக்குனர் ராஜேஷிடம் உதவியாளராக பணிபுரிந்த ஜெகதீஷ் என்பவர் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார்.

இந்த படத்திலும் சந்தானம் இருக்கிறார்.

ஜனவரி மாதம் முதல் இந்த படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாகும்.

படத்திற்கு அநேகமாக ‘நண்பேன்டா’ என பெயர் வைக்கப்படலாம்.

Read Previous

மூத்த பி.ஆர்.ஓ.க்களுக்கு நிதி உதவி…

Read Next

இராம.நாராயணனின் ‘ஆர்யா சூர்யா’