இன்று ஜுலை 12 வெளியாகும் திரைப்படங்களைப் பற்றிய சிறு விவரம்…
காதலே என்னை காதலி
RF சினிமாஸ் தயாரிப்பில் ஷன் இயக்கியிருக்கும் படம். இசை – விமல். சந்தோஷ், அனாரா (லண்டன்), நிழல்கள் ரவி, மனோரமா, மயில்சாமி மற்றும் பலர் நடித்திருக்கும் படம். முற்றிலும் லண்டனிலேயே படமாக்கப்பட்ட படம்.
அன்பா அழகா
ஃபுட் ஸ்டெப்ஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் எஸ். சிவராமன் இயக்கியிருக்கும் படம். இசை – அருள் முருகன். ஆகாஷ், ப்ரீத்தி, லாவன்யா, சுந்தர், சாந்தி மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.
சத்திரம் பேருந்து நிலையம்
ஹாஜி சினி கிரியேஷன்ஸ் தயாரிப்பில் ரவிபிரியன் இயக்கிருக்கும் படம். இசை – ஸ்ரீராம். ரோஷன், டிவிங்கிள், பாண்டியராஜன் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.


