‘பிரியாணி’ சமைச்சாச்சி…

biriyani-last-day-shootவெங்கட் பிரபு இயக்கத்தில், யுவன்ஷங்கர் ராஜா இசையமைப்பில் கார்த்தி, ஹன்சிகா, பிரேம்ஜி மற்றும் பலர் நடிக்கும் ‘பிரியாணி’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டதாம்.

நடுவில் கொஞ்ச நாள் இப்படத்தின் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டு கார்த்தி,  ராஜேஷ் இயக்கத்தில் ‘ஆல் இன் ஆல் அழகுராஜா’ படத்தில் நடிக்கப் போய்விட்டார். இது ‘பிரியாணி’ படம் பற்றிய தேவையற்ற வதந்தியை கிளப்பிவிட்டது.

தற்போது படப்பிடிப்பை நிறைவாக முடித்து விட்டனர். படத்தின் பின் தயாரிப்புப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

அடுத்த மாதம் படத்தின் இசை வெளியீடு நடக்க இருக்கிறது. யுவன்ஷங்கர் ராஜா இசையில் வெளிவரும் 100வது படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

‘ஆல் இன் ஆல் அழகுராஜா’ படத்திற்கு முன் இப்படம்  வெளியாகும் எனத் தெரிகிறது.

Read Previous

60வது பிலிம்ஃபேர் விருதுகள்…

Read Next

‘மரியான்’ டப்பிங் பிரச்சனை…