விஷால், அஞ்சலி, வரலட்சுமி, சந்தானம் மற்றும் பலர் நடிக்க விஜய் ஆண்டனி இசையில் சுந்தர் .சி இயக்கியுள்ள ‘மத கஜ ராஜா’ திரைப்படம் அடுத்த மாதம் 6ம் தேதி வெளியாகிறது.
இப்படத்திற்கு அனைவரும் பார்க்கக் கூடிய ‘யு’ சர்டிபிகேட் வழங்கப்பட்டுள்ளது.
தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம் ஆகிய நான்கு மொழிகளிலும் இப்படம் வெளியாகிறது.
சுந்தர் .சி இயக்கத்தில் வெளிவரும் படங்கள் தொடர்ச்சியாக வெற்றி பெற்று வரும் சூழ்நிலையில், இந்த படத்தை விஷால், அவருடைய சொந்த படத் தயாரிப்பு நிறுவனமான விஷால் பிலிம் பேக்டரி மூலம் வெளியிடுகிறார்.
‘பட்டத்து யானை’ படத்திற்குப் பிறகு விஷால் நடித்து வெளி வரும் படம் ‘மத கஜ ராஜா’….
இப்படத்தின் வெற்றி மூலம் விஷாலுக்கு ‘யானை பலம்’ கிடைத்தால் சரி…..