இன்று 30 ஆகஸ்ட் 2013, வெளியாகும் படங்களைப் பற்றிய சிறு விவரம்…
தங்க மீன்கள்
ஜேஎஸ்கே பிலிம் கார்ப்பரேஷன் – ஜே.சதீஷ்குமார் வழங்க , ஃபோட்டோன் கதாஸ் – கௌதம் வாசுதேவ் தயாரிப்பில் ராம் இயக்கியிருக்கும் படம். இசை – யுவன்ஷங்கர் ராஜா. ராம், பேபி சாதனா, ‘பூ’ ராம், ரோகிணி, ஷெல்லி மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.
பொன் மாலைப் பொழுது
டாக்டர் வி. ராமதாஸ் வழங்க, ஏஜி கிரியேஷன்ஸ் – கே.அமிர்தா கௌரி, டாக்டர். கே. சத்யலட்சுமி தயாரிப்பில் ஏ.சி. துரை இயக்கியிருக்கும் படம். இசை – சத்யா. புதுமுகம் ஆதவ் கண்ணதாசன், காயத்ரி, கிஷோர் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.
சும்மா நச்சுன்னு இருக்கு
எஸ்தெல் என்டர்டெய்னர்ஸ், பி. விமல் தயாரிப்பில் ஏ. வெங்கடேஷ் இயக்கத்தில் அச்சு இசையமைத்திருக்கும் படம். தமன், சீனிவாசன், தம்பி ராமையா, விபா, அர்ச்சனா மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.
சுவடுகள்
பாலா புரொடக்ஷன்ஸ் சார்பாக தயாரித்து, இயக்கி, ஹீரோவாக நடித்திருப்பவர் ஜெய்பாலா. இசை – எம்.எஸ்.விஸ்வநாதன். மோனிகா, கே.ஆர். விஜயா, ராஜேஷ், சரண்யா மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.



