விஜய் சேதுபதி, ஐஸ்வர்யா, ஜெயப்பிரகாஷ் மற்றும் பலர் நடிக்க அறிமுக இயக்குனர் அருண்குமார் இயக்கும் ‘பண்ணையாரும் பத்மினியும்’ படத்தின் இசை வெளியீடு அடுத்த மாதம் நடைபெற இருக்கிறது.
இப்படத்தினை மேலும் விளம்பரப்படுத்துவதற்காக படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில்(?) இடம் பெறும் ‘பத்மினி’ காரை வைத்து ஒரு ‘ரோடு ஷோ’ நடத்த திட்டமிட்டிருக்கிறார்கள்.
ஒரு ‘பத்மினி’ கார் நாகர்கோவிலிலிருந்தும், மற்றொன்று கோயம்புத்தூரிலிருந்தும் புறப்பட்டு சென்னையை வந்தடைகிறது. வரும் வழியெல்லாம் அந்தந்த ஊருக்கேற்ப வரவேற்பு நடக்கப் போகிறது.
சென்னையை வந்தடைந்ததும், படக்குழுவினர் ‘பத்மினி’ கார்களை வரவேற்கிறார்கள்.
இப்படத்தில் பண்ணையாரின் மகளாக சினேகா நடிப்பது படத்திற்கு கூடுதல் பலத்தை கொடுத்திருக்கிறதாம்.
‘அட்டகத்தி’ தினேஷ் கௌரவத் தோற்றத்தில் நடித்திருக்கிறார்.
பிரபாகர் இசையமைக்கும் இப்படத்தை மேஜிக் பாக்ஸ் சார்பாக எம்.ஆர்.கணேஷ் தயாரிக்கிறார்.