திருக்குமரன் என்டர்டெயின்மென்ட் சார்பில் சி.வி. குமார், ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கும் படம் ‘முண்டாசுபட்டி’.
நாளைய இயக்குனர் இரண்டாம் பகுதியில் ‘முண்டாசுபட்டி’ என்ற குறும் படத்தினை இயக்கிய டி. ராம், அதே படத்தினை பெரிய திரைக்கு இயக்கி வருகிறார்.
விஷ்ணு, நந்திதா இருவரும் முதன் முறையாக இணைந்து நடிக்கிறார்கள்.
‘நீர்ப்பறவை’ வெற்றிப் படத்தைத் தொடர்ந்து விஷ்ணுவும், ‘அட்டகத்தி’, ‘எதிர் நீச்சல்’ வெற்றிப் படங்களைத் தொடர்ந்து நந்திதாவும் நடிக்கும் படம் இது.
எழுத்தாளர் சாண்டியல்யனின் பேரன் ஆர்.ராகவேந்திரா இப்படத்திற்கு இசையமைக்கிறார்.
‘அட்டகத்தி’, ‘பீட்சா’, ‘சூது கவ்வும்’ ஆகிய வெற்றிப் படங்களைத் தொடர்ந்து ‘வில்லா – பீட்சா 2’, ‘தெகிடி’ படங்களையும் தயாரித்து வரும் திருக்குமரன் என்டெர்டெயின்மென்ட்டின் அடுத்த தயாரிப்பு ‘முண்டாசுபட்டி’.
இப்படத்தின் படப்பிடிப்பு கோயம்புத்தூரில் துவங்கி, தொடர்ந்து நடைபெற்று வருகிறது.