‘ரேஸ்கோர்ஸ்’ ரகுநாத் இயக்கத்தில் சஞ்சய், ஐஸ்வர்யா மற்றும் பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘சிறுவாணி’.
இப்படத்தின் படப்பிடிப்பு சிறுவாணி காட்டுப் பகுதிக்குள் நடைபெற்ற போது, சஞ்சய், ஐஸ்வர்யா இருவரும் புதைகுழியில் சிக்கிக் கொண்டார்களாம்.
அது பற்றி இயக்குனர் ரேஸ்கோர் ரகுநாத் கூறியதாவது,
“கதாநாயகன் சஞ்சய் நாயகி ஐஸ்வர்யா இருவரும் காதலிப்பது போன்ற காட்சியை தூரத்தில் காமிரா வைத்து படமாக்கினோம் அவர்கள் காதல் வயப்பட்டு நடந்து செல்வது போன்ற காட்சி
திடீர் என்று இருவரும் புதைகுழியில் விழுந்து விட்டனர் பயத்தில் அவர்கள் கதற
அந்த ஊரை சேர்ந்த எனக்கே அந்த நிமிடத்தில் உயிர் போய் உயிர் வந்தது படத்தில் இது மாதிரி நிறைய சம்பவங்களை சந்தித் திருக்கிறோம்.
அந்தமானில் அட்டை கடிக்கு பலர் நிறைய ரத்தத்தை இழந்திருக்கிறோம் இவ்வளவு கஷ்ட பட்டு எடுத்த படமும்,பாடல் காட்சிகளும் சிறப்பாக வந்திருகிறது. தேவா சாரின் பாட்டு எங்களுக்கு பெரிய பலம்,” என்கிறார் இயக்குனர் ரேஸ்கோர்ஸ் ரகுநாத்.