அஜித், நயன்தாரா, ஆர்யா, டாப்ஸீ மற்றும் பலர் நடிக்கும் ‘ஆரம்பம்’ படம் தீபாவளிக்கு வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
விஷ்ணுவர்தன் இயக்கத்தில் யுவன்ஷங்கர் ராஜா இசையமைக்கும் படம் இது.
இப்படத்தின் நிர்வாக தயாரிப்பாளரான ஏ.எம். ரத்னம் இப்படத்தின் வெளியீடு பற்றிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
‘ஆரம்பம்’ அஜீத் ரசிகர்களுக்கு ஒரு தீபாவளி விருந்தாக இருக்கும் , படப்பிடிப்பு முடிந்து விட்டாலும் படத்தை மெருகேற்றும் இறுதிக் கட்ட வேலைகள் தொடர்ந்து நடை பெற்றுக் கொண்டு இருக்கிறது .
யுவன் ஷங்கர் ராஜாவின் இசை , மிகப் பெரிய அளவில் பேசப்படும். ‘ஆரம்பம்’ படத்தின் இசை வெளியீடு குறித்த தேதி ஓரிரு நாளில் அறிவிக்கப்படும் , ‘ என்றும் அவர் கூறினார்.