விஷால் பற்றி வதந்தி வேண்டாம் – வரலட்சுமி வேண்டுகோள்

madha gaja raja‘மத கஜ ராஜா’ படப்பிரச்சனை சம்பந்தமாக விஷாலுக்கு உடல் நிலை சரியில்லையென நேற்று திடீரென வதந்தி பரவியது.

ஆனால், படப்பிரச்சனை எதுவும் காரணமல்ல, அவர் கடந்த 10 நாட்களாக ஓய்வு இல்லாமல் உழைத்ததன் காரணமாகவே அவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது என அவரது மக்கள் தொடர்பாளர் செய்தி அனுப்பியிருந்தார்.

‘மத கஜ ராஜா’ படம் முடிவடைந்து பல நாட்களாக முடங்கிக் கிடந்த நிலையில் , தன் படம் அப்படி தேங்கி விடக்கூடாது என முடிவெடுத்து, விஷால் அவருடைய சொந்த கம்பெனி மூலமாக படத்தை நாளை வெளியிட முடிவெடுத்தார்.

ஆனால், பைனான்ஸ் பிரச்சனை காரணமாக பேச்சு வார்த்தை நடந்து வருவதாகவும், அந்த பிரச்சனை விரைவில் தீர்க்கப்பட்டு டம் 6ம் தேதிக்குப் பதிலாக 7ம் தேதி வெளியாகும் என்றும் தெரிகிறது.

இதனிடையே அந்த படத்தில் விஷால் ஜோடியாக நடித்துள்ள வரலட்சுமி, “விஷால்  நலமாக உள்ளார். வெறும் மன அழுத்தம் மட்டுமே. அவரைப் பற்றிய வதந்திகளை பரப்ப வேண்டாம்,” என கேட்டுக் கொண்டுள்ளார்.

Read Previous

யுவன்ஷங்கர் ராஜாவின் 100வது படம் ‘ஆரம்பம்’ ?

Read Next

மீண்டும் வருகிறார் ஜீவன்..

Most Popular