செல்வராகவன் இயக்கத்தில், ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைப்பில், ஆர்யா, அனுஷ்கா மற்றும் பலர் நடிப்பில் பிரம்மாண்டமாகத் தயாராகி வரும் ‘இரண்டாம் உலகம்’ திரைப்படம் தீபாவளிக்கு வெளியாக உள்ளதாக தயாரிப்பு நிறுவனமான பிவிபி சினிமாஸ் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர்.
இப்படம் தமிழ் தவிர, தெலுங்கு, இந்தி, ஜார்ஜியன், ரஷ்யன், உஸ்பெக், துர்கிஷ் ஆகிய மொழிகளிலும் வெளியாக உள்ளது.
காதல் மற்றும் வியக்கத்தக்க துணிச்சலான சண்டைக் காட்சிகளுடனும், கிராபிக்ஸ் காட்சிகளுடனும் உலகத்தரத்தில் இப்படம் தயாராகி உள்ளது.
60 கோடி ரூபாய் செலவில் தயராகி உள்ள இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை, ஹைதராபாத், கோவா, ஜார்ஜியா, தாஷ்கன்ட் ஆகிய இடங்களில் நடைபெற்றுள்ளது.
ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் 6 அருமையான பாடல்கள் படத்தில் இடம் பெற்றுள்ளது. ராம்ஜி ஒளிப்பதிவையும், கோலா பாஸ்கர் படத்தொகுப்பையும் செய்துள்ளனர்.
விஷுவல் எபெக்ட்ஸ் சூபர்வைசராக கீத் டெல்வின், சவுன்ட் எஞ்சினியராக ஸ்டீபன் கோம்ஸ், சண்டைக் காட்சிகளை சுரா நானோபாஷ்விலி ஆகியோர் பணி புரிந்துள்ளனர்.
தீபாவளியன்று அதிக திரையரங்குகளில் வெளியாக உள்ளது ‘இரண்டாம் உலகம்’.