சிவகார்த்திகேயன், சத்யராஜ், ஸ்ரீதிவ்யா, சூரி மற்றும் பலர் நடித்து நாளை செப்டம்பர் 6ம் தேதி ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படம் வெளியாக உள்ளது.
‘மத கஜ ராஜா’ படத்தின் வெளியீடு பற்றி உறுதியான தகவல் எதுவும் இன்னும் வெளிவராத நிலையில் சிவகார்த்திகேயனுக்கு போட்டியாக ‘ஆர்யா – சூர்யா’ களமிறங்குகிறார்கள்.
இராம. நாராயணன் இயக்கியிருக்கும் ‘ஆர்யா – சூர்யா’ படம் செப்டம்பர் 7ம் தேதி வெளியாகிறது.
இப்படத்தில் பவர்ஸ்டார் சீனிவாசன், விஷ்ணுப்ரியன், கங்கை அமரன், வெண்ணிற ஆடை மூர்த்தி, கோவை சரளா, சித்ரா லட்சுமணன், நட்சத்திரா, ருக்ஷா, நளினி, ஆர்த்தி கணேஷ், முமைத்கான் இவர்களுடன் டி. ராஜேந்தர் ஒரு பாடலுக்கு சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார்.
இரண்டு காமெடி ஹீரோக்கள் ஒரே வாரத்தில் மோதிக் கொள்கிறார்கள்.
பார்ப்போம்…வெற்றி யாருக்கு என்று…?