திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் ‘ராஜா ராணி’ படத்தின் ‘சக்சஸ் பார்ட்டி’ நேற்று கொண்டாடப்பட்டது.
இதில் ‘ராஜா ராணி’ படக்குழுவினருடன் பல நடிக, நடிகையர்களும் கலந்து கொண்டு அவர்களை வாழ்த்தினர்.
இதில் ஹைலைட்டான விஷயம், சிம்புவும் இந்த பார்ட்டியில் கலந்து கொண்டதுதான். ஆனால், சிம்பு , நயன்தாரா சந்தித்த புகைப்படத்தை ‘சரியாக’ நமக்கு அனுப்பாமல் விட்டு விட்டார்கள். ஆனால், ஆர்யா , நயன்தாராவுக்கு கேக் ஊட்டும் புகைப்படத்தையும், பதிலுக்கு நயன்தாரா , ஆர்யாவுக்கு கேக் ஊட்டும் புகைப்படத்தையும் மறக்காமல் அனுப்பியிருக்கிறார்கள்.
இந்த ‘பார்ட்டி’யில் ஜெயம் ரவி, ஜீவா, ஷாம், சாந்தனு, உதயநிதி ஸ்டாலின், ரம்யா கிருஷ்ணன், கார்த்திகா, ஆன்ட்ரியா, சோனியா அகர்வால், உட்பட பலர் கலந்து கொண்டனர்.
படத்தில் நடித்த ஆர்யா, நயன்தாரா, ஜெய், இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார், மற்ற டெக்னீஷியன்களும் கலந்து கொண்டனர். கடந்த இரண்டு நாட்களாக தேவையற்ற சர்ச்சையை கிளப்பிய ‘சர்ச்சை நாயகி’ நஸ்ரியா இதில் கலந்து கொள்ளவில்லை…
தயாரிப்பாளர்கள் ஏ.ஆர். முருகதாஸ், சண்முகம் படக்குழுவினருக்கு தங்கச் சங்கிலியை பரிசாக அளித்தனர்.