ஹரி இயக்கத்தில் தேவிஸ்ரீபிரசாத் இசையில் சூர்யா, அனுஷ்கா, ஹன்சிகா, சந்தானம் மற்றும் பலர் நடித்த ‘சிங்கம் 2’ திரைப்படம் இன்று 100வது நாளை தொட்டிருக்கிறது.
ஹரி – சூர்யா கூட்டணியில் ‘சிங்கம்’, ‘சிங்கம் 2’ இரண்டுமே மாபெரும் வெற்றிப் படங்களாக அமைந்து விட்டது.
இந்த கூட்டணி இதற்கு முன் இணைந்த “வேல், ஆறு” ஆகிய படங்களும் வெற்றிப் படங்களாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.
இன்றைய சூழ்நிலையில் ஒரு ஹீரோவும், டைரக்டரும் அடுத்தடுத்த படங்களில் மீண்டும் இணைந்து பணியாற்றுவது என்பது மிகப் பெரிய விஷயமாகும்.
அப்படியிருக்க ஹரி – சூர்யா கூட்டணி நான்கு படங்களில் இணைந்து பணியாற்றியிருப்பது வரவேற்க வேண்டிய ஒன்று.
எப்படியும் ‘சிங்கம் 3’யும் வந்தால் ஆச்சரியப்படுவதற்கில்லை…