தீபாவளிக்கு ‘ஆரம்பம்’ ரிலீஸ் ‘கன்ஃபர்ம்’…

arrambam-release-adஅஜித், ஆர்யா, நயன்தாரா, டாப்ஸீ மற்றும் பலர் நடிக்க யுவன்ஷங்கர் ராஜா இசையில் விஷ்ணுவர்த்தன் இயக்கியுள்ள ‘ஆரம்பம்’ படம் தீபாவளிக்கு வெளி வருவது உறுதியாகிவிட்டது.

இப்படம் தீபாவளிக்கு வெளி வராது என பலர் ஆரூடம் சொன்ன நிலையில் அதிகாரபூர்வமாக இப்படம் தீபாவளியன்று வெளியாகப் போகிறது என விளம்பரம் கொடுத்து விட்டார்கள்.

அஜித் படம் வெளி வருவதை எப்படியாவது தடுக்க வேண்டும் என ஒரு சிலர் நினைத்த நிலையில் அந்த பிரச்சனைகளையெல்லாம் சமாளித்து ‘ஆரம்பம்’ படம் அமர்க்களமாக வெளி வருகிறது.

இந்த தீபாவளிக்கு மிகப் பெரும் எதிர்பார்ப்பையும், வசூலையும் குவிக்கும் படமாக ‘ஆரம்பம்’ இருக்கும் என நம்பப்படுகிறது.

Read Previous

சர்வதேச திரைப்பட விழாவில் ‘தங்க மீன்கள்’

Read Next

‘ஜன்னல் ஓரம்’ – பேருந்து நிலையங்களில் இசை வெளியீடு…