அஜித்தின் கடமை உணர்ச்சி – எழுத்தாளர்கள் சுபா…

arrambam_00001அஜித் நடித்துள்ள ‘ஆரம்பம்’ படத்திற்கு இரட்டை எழுத்தாளர்கள் சுபா, வசனம் எழுதியுள்ளனர்.

‘ஆரம்பம்’ படத்தில் பணியாற்றியது தங்களுக்கு மிகவும் சிறப்பான அனுபவம் என அவர்கள் கூறியுள்ளனர்.

இது பற்றி அவர்கள் மேலும் கூறியதாவது,

“இயக்குனர் விஷ்ணுவர்த்தன் இப்படி ஒரு படத்தை எடுக்கப் போகிறோம் என கூறியபோது , அஜீத் ரசிகர்களின்  எதிர்பார்ப்பை பூர்த்தி  செய்ய வேண்டும் என்ற எண்ணமே கதையாக உருவெடுத்தது .

மூன்று மாதங்களுக்குப் பிறகு கதைக் கருவை அவரிடம் பகிர்ந்து  கொள்ள  முதன்முதலாக அவரை சந்தித்த போது அவரது எளிமை எங்களை கவர்ந்தது . ஒரு நட்சத்திரத்துக்குரிய  எந்த பந்தாவும் இல்லாமல் அவர் இருந்தது வியப்பு ஊட்டியது. அந்த வியப்பு அடங்கும் முன்னரே அவர் விடுத்த வேண்டுகோள் எங்களை மேலும் வியப்பூட்டியது.

அது படத்தில் தன்னை புகழும் காட்சிகளோ , வசனங்களோ , பஞ்ச் வசனங்களோ இருக்கக் கூடாது என்பதுதான். கதைக்குத்தான் நாயகனே தவிர நாயகனுக்கு கதை இல்லை என்பதை தெளிவாக வலியுறுத்தினார்

அவர் தன்னுடன் நடிக்கும் மற்ற நடிகர்களுக்கும் முக்கியத்துவம் இருக்கும் வகையில் காட்சி அமைப்பை அமைக்குமாறு இயக்குனரிடம் கூறியதைக் கேட்ட பிறகு தான் அந்த மனிதருக்கு அவர் மீதுள்ள தன்னம்பிக்கையின் அர்த்தம் புரிந்தது .

அந்த தன்னிம்பிக்கை அவருடன் பணியாற்றும் மற்றவர்களுக்கும் ஒட்டிக் கொண்டது என்றால் மிகை ஆகாது . படத்துக்காக அவர் எடையை குறைத்தால் நன்றாக இருக்கும் என்ற உடனே  பல  ஆபரேஷன் செய்துள்ள அவரது உடல் நிலையையும் மீறி, ஒரு தினத்துக்கு 5 முதல் 6 மணி நேரம் வரை அயராமல் உடல் பயிற்சி செய்த அவரது கடமை உணர்ச்சி தான் அவரை இந்த உயரத்துக்கு கூட்டிச்  சென்று இருக்கும் என தெளிவாக புரிந்தது .

நாங்கள் பல நடிகர்களின் படங்களில் பணி புரிந்து இருக்கிறோம் , பணியாற்றிக் கொண்டு இருக்கிறோம். ஆனால் இதுவரை எந்த படத்துக்கும் ‘ஆரம்பம்’ படத்தைப் பற்றிய ஆர்வம் போல் கண்டதில்லை.

 எல்லா தரப்பு ரசிகர்களும் இந்த படத்தை  எதிர்பார்த்துக் கொண்டு இருப்பதை பார்க்கும் போதுதான்  அவருடைய ‘Fan  base’  எந்த அளவுக்கு பரந்து உள்ளது என்பது புலப்டுகிறது.

ஏராளமான பொருட் செலவு , விஷ்ணுவின் ஸ்டைலிஷ் இயக்கம் , யுவன் ஷங்கர் ராஜாவின் மெய் மறக்கும் இசை,  ஆகியவை அந்த எதிர்பார்ப்பை சந்திக்கும் என்ற நம்பிக்கை எங்களுக்கு நிச்சயம்  உண்டு .

ஆர்யாவுக்கும், அஜீத் சாருக்கும்   உள்ள பரஸ்பர மரியாதை , நட்பு ஆகியவை தமிழில் இனிமேல் பல நட்சத்திரங்கள் இணைந்தது நடிக்கும் காலம் வரும் என்ற நம்பிக்கையைத் தருகிறது.

அதற்கு இந்த படம் தான் ‘ஆரம்பம்’, என்று அஜித்தைப் பற்றி பெருமையாகக் கூறுகின்றனர்.

Read Previous

‘ஜன்னல் ஓரம்’ – பேருந்து நிலையங்களில் இசை வெளியீடு…

Read Next

கௌதம் விவகாரம் : சூர்யாவுக்குப் பிடிக்காதது…விக்ரமுக்கு பிடித்தது…