‘ஸ்ரீபெரும்புதூர்’ என்ற பெயரில் ஒரு தெலுங்குப் படம்..

mission-90-daysபடத்தின் தலைப்பே எதைப் பற்றிய படம் என்பதை புரிய வைத்திருக்கும்.

2007ம் ஆண்டு மேஜர் ரவி இயக்கி மம்முட்டி நாயகனாக நடித்த ‘மிஷன் 90 டேஸ்’  (Mission 90 Days) என்ற படத்தை ‘ஸ்ரீபெரும்புதூர்’ என்ற பெயரில் தெலுங்கில் மொழி மாற்றம் செய்து வெளியிட இருக்கிறார்கள்.

இப்படத்தின் கதை என்ன என்பதை இணையதளங்களில் தேடிப் பார்த்த போது ராஜீவ் காந்தி கொலை பற்றிய வழக்கை மையமாகக் கொண்டு இந்த படத்தை எடுத்திருக்கிறார்கள்.

ராஜீவ் காந்தி கொலைக்குப் பிறகு சிறப்பு புலனாய்வுப் பிரிவு ஒன்றை ஏற்படுத்தி அதற்கு மம்முட்டியைத் தலைவராக நியமிக்கிறார்கள். அவரிடம்  கொலையாளிகளை உயிரோடு பிடிக்க வேண்டும் என்று கட்டளையிடுகிறார்கள். ஆனால், கடைசியில் அவர் கொலையாளிகளைக் கண்டுபிடித்தும், ஒரு இரவு அவரை காக்க வைத்து , அவர்களை உயிரோடு பிடிக்க முடியாமல் போகிறது. புலனாய்வு வலையில் மாட்டிக் கொண்ட கொலையாளிகள் சயனைடு சாப்பிட்டும், தன்னைத் தானே சுட்டுக் கொண்டும் தற்கொலை செய்து கொள்கிறார்கள்.

இதை மையமாக வைத்துதான் இந்த திரைப்படத்தை உருவாக்கியிருக்கிறார்கள்.

ஆறு ஆண்டுகள் கழித்து இப்படத்தை தெலுங்கில் ஏன் மொழி மாற்றம் செய்கிறார்கள் என்பது புதிரான ஒன்று…..

Read Previous

நயன்தாரா நடிக்கும் ‘அனாமிகா’ – டிசம்பர் ரிலீஸ்…

Read Next

‘ஆரம்பம்’ படத்தைப் பார்த்து பாராட்டிய அஜித்…