சிம்பு, தனுஷ் இருவரும் ஒரே காலகட்டத்தில் ஹீரோக்களாகி தொடர்ந்து திரையுலகில் போட்டி போட்டு வளர்ந்து வரும் ஹீரோக்களாக இருந்து வருகிறார்கள்.
இருவருக்குமிடையில் எந்த பேச்சும், நட்பும் கிடையாது என பலர் சொல்லிக் கொண்டு வந்த சூழ்நிலையில், இருவரும் சில மாதங்களுக்கு முன் திடீரென நட்பு பாராட்டியது பலரையும் ஆச்சரியப்படுத்தியது-
அதைப் பற்றிய விவரத்தை, நேற்று விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘காஃபி வித் டிடி’ நிகழ்ச்சியில் தனுஷ் பகிர்ந்து கொண்டார்.
சிம்பு பற்றி அந்நிகழ்ச்சியில் தனுஷ் பேசியதாவது,
“என்னோட “Most Controversial” (அதிகமான சர்ச்சைக்குரிய) நண்பர் சிம்பு.
சிம்புகிட்டயும், என்கிட்டயும் நிறைய வேற்றுமை இருக்கு. நான் எதையுமே கடகடன்னு செய்யறவன், அவர் எதையும் பொறுமையா செய்யறவரு.
ரெண்டு பேரும் கும்ப ராசி, ரெண்டு பேரும் சதய நட்சத்திரம். எங்க ரெண்டு பேருக்குள்ளயும் அது ஒரு ஒற்றுமை. இன்னொரு ஒற்றுமை என்னன்னா, எங்க ரெண்டு பேரையுமே புரிஞ்சிக்கிறது ரொம்ப கஷ்டம்.
என்னை விட ரெண்டு வயசோ, ஒன்றரை வயசோ சின்னவருன்னு நினைக்கிறேன்.
நிறைய பேருக்கு நானும், சிம்புவிம் பிரண்ட்ஸ் ஆனது பிடிக்கலை. பல பேர் அதை என் கிட்டயே வந்து வெளிப்படுத்தினாங்க. பாவம், அவங்களுக்கு மெச்சூரிட்டி இல்லை, என்ன பண்றது. ஆனால், நாங்க ரெண்டு பேரும் அதைப் பத்திக் கவலைப்படலை.
முதல்ல, நாங்க சரியா பேசிக்காத காரணத்தினால, நிறைய பேரு எங்களுக்குள்ள ஒரு பெரிய கேப்பை உருவாக்கிட்டாங்க. ஆனால், அவருக்கும் எனக்கும் பர்சனலா எந்த பிராப்ளமும் இல்லை.
ஒரு ஃபங்ஷன்ல மீட் பண்ணி நாங்க பேசிக்கும் போதுதான் தெரிஞ்சது, எங்களுக்குள்ள நடுவுல எவ்வளவு பேரு பேசியிருக்காங்கன்னு தெரிஞ்சுது. அப்புறம்தான் நாங்க பிரண்ட் ஆனோம்.
தொழில் ரீதியா எங்களுக்குள்ள ஒரு போட்டியை உருவாக்கி அதுதான் நிஜம்னு ஆகிட்டாலும், அத மத்தவங்க உருவாக்கியிருந்தாலும், நாங்க ஒருத்தருக்கொருத்தர் பொறாமை இல்லாம இருக்க முடியுது. எனக்கு நல்லது நடக்கணும்னு அவர் நினைக்கிறாரு, அவருக்கு நல்லது நடக்கணும்னு நான் நினைக்கிறேன்.
அந்த அளவுக்கு, சினிமா வாழ்க்கையை தனியாவும், நிஜ வாழ்க்கைய தனியாவும் பிரிச்சிப் பார்த்து எங்களால நல்ல நண்பர்களா இருக்க முடியுதுன்னா, அது ஏன் மற்றவர்களை உறுத்துதுன்னு தெரியலை.
ஒரு வேளை, மத்தவங்களால அத மாதிரி இருக்க முடியலையோ என்னவோ..
எங்களுக்குள்ள புரிஞ்சிக்கிட்டு நாங்க நல்ல நண்பர்களா இருக்கோம். இப்படி நடந்தது ரொம்ப நல்ல விஷயம், ” என்று மனம் திறந்து பேசினார் தனுஷ்.
இன்னும் கூட நிறைய பேசினாரு, சிம்புவ பத்தி, ஆனால்…எல்லாமே இங்கிலீஷ்ல பேசினாரு…
ம்ம்…ஹீரோயின்ஸ் இங்கிலீஷ்ல பேசினா மட்டும் திட்டறீங்க…