கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு…

vtv-shooting-spotகௌதம் மேனன் இயக்கத்தில் சூர்யா நடிப்பதாக இருந்த ‘துருவ நட்சத்திரம்’ கைவிடப்பட்டதும், அஜித், கௌதம் மேனன் நடிக்கும் படத்தில் நடிக்கவிருப்பதாக அறிவிக்கப்பட்டதும் அனைவருக்கும் தெரிந்ததே.

கௌதம் மேனன் – அஜித் நடிக்கும் படத்திற்கு முன்னதாக கௌதம் மேனன் தற்போது சிம்புவை வைத்து ஒரு படத்தை இயக்க முடிவெடுத்து, அந்த படத்தின் படப்பிடிப்பு நேற்றிலிருந்து ஆரம்பமானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிம்பு, ஏற்கெனவே பாண்டிராஜ் இயக்கும் புதிய படத்தில் இரவு, பகலாக நடித்து வருகிறார். இந்த படத்திற்கு இன்னும் பெயர் வைக்கவில்லை.

இப்படத்தோடு சேர்ந்து சிம்பு இப்போது பெயர் வைக்கப்படாத கௌதம் மேனன் படத்தில் நடிக்க ஆரம்பித்திருப்பது ஆச்சரியத்தை எற்படுத்தியுள்ளது. கௌதம் மேனன், சிம்பு இணைந்த ‘விண்ணைத் தாண்டி வருவாயா’ பல மேஜிக்கை ஏற்படுத்திய படம் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏனென்றால் சிம்பு நடித்த ‘வாலு, வேட்டை மன்னன்’ இரு படங்களும் எப்போது வரும் என்று தெரியாத நிலையில் சிம்பு அடுத்தடுத்து படங்களில் நடிக்க ஆரம்பித்திருக்கிறார்.

எது எப்படியோ, கௌதம் மேனனுக்கு கை கொடுக்க ‘விண்ணைத் தாண்டி வந்திருக்கிறாரே….’.

Read Previous

பார்த்திபன் நடிக்கும் ‘திகார்’

Read Next

குழம்ப வைக்கும் படத் தலைப்புகள்…