தீபாவளிக்கு வெளிவந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் ‘பாண்டிய நாடு’ படத்தின் தொலைக்காட்சி உரிமையை ராஜ் டிவி நிறுவனத்தினர் 10 கோடி ரூபாய் கொடுத்து வாங்க உள்ளார்கள் என கோடம்பாக்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
விஷால், லட்சுமி மேனன், சூரி மற்றும் பலர் நடித்த இப்படத்தை சுசீந்திரன் இயக்கியுள்ளார், இமான் படத்திற்கு இசையமைத்துள்ளார்.
இப்பேதெல்லாம் ஒரு ஹிட்டான படத்தின் தொலைக்காட்சி உரிமை 10 கோடி ரூபாய்க்கு மேல்தான் விற்கப்படுகிறது.
நீண்ட நாட்களாக பெரிய படங்கள் எதையும் வாங்காமல் இருந்த ராஜ் டிவி இப்போது புதுப் படங்களை வாங்க அதிரடியாக களம் இறங்கியுள்ளார்களாம்.
‘பாண்டிய நாடு’ படத்தை பத்து கோடி கொடுத்து வாங்கியிருப்பது அதன் தொடக்கம்தானாம்.
தொடர்ந்து பல பெரிய படங்களை வாங்க ராஜ் டிவி நிறுவனத்தினர் முடிவெடுத்துள்ளார்களாம்.
போட்டி அதிகமாவதால் இனி, படங்களின் விலையும் மேலும் உயர வாய்ப்புள்ளது.