என் கவர்ச்சியைப் பார்த்து சிலருக்குப் பொறாமை – சார்மி

charmi-1311‘காதல் அழிவதில்லை’ படத்தில் சிம்புவின் ஜோடியாக அறிமுகமானவர் சார்மி.

ஆனால், அதற்குப் பிறகு தமிழில் சரியான வாய்ப்பு கிடைக்காமல் தெலுங்குப் பக்கம் போனார். அங்கு முன்னணி நடிகைகளில் ஒருவரானார்.

இருந்தாலும் சமீப காலமாக பல புது நடிகைகளின் வரவால் கொஞ்சம் மார்க்கெட் சரிந்தது சார்மிக்கு. அதோடு, குண்டாக வேறு ஆகி விட்டார்.

மீண்டும் சரிந்த மார்க்கெட்டை பிடிக்க, கடுமையான உடற்பயிற்சி செய்து உடல் எடையைக் குறைத்ததோடு , புத்தம் புதிய போட்டோக்களை தெலுங்கு மீடியாக்களுக்கு அளித்தார்.

அவரது கவர்ச்சிகரமான போட்டோக்களைப் பார்த்து இன்றைய முன்னணி நடிகைகள் அதிர்ச்சியடைந்தார்களாம்.

“என்னுடைய இந்த  கவர்ச்சியான போட்டோக்களைப் பார்த்து சில நடிகைகளுக்குப் பொறாமையாக உள்ளது. அது பற்றியெல்லாம் நான் கவலைப்படவில்லை. என்னுடைய ரசிகர்களுக்கு இந்த தோற்றம் மிகவும் பிடித்திருக்கிறது. நடிகைகள் பொறாமைப்பட்டால் ஒன்றும் ஆகி விடப்போவதில்லை,” கூறியிருக்கிறார் சார்மி.

Read Previous

சென்னையில் அதி நவீன ‘டான் ஸ்டுடியோ’ திறப்பு…

Read Next

விஜய் இயக்கும் ‘சைவம்’…