பொங்கலுக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த ‘பிரியாணி’ திரைப்படம் அதற்கு முன்னதாகவே, அதாவது, டிசம்பர் 20ம் தேதியே வெளிவர உள்ளது.
கார்த்தி, ஹன்சிகா, பிரேம்ஜி மற்றும் பலர் நடித்துள்ள இப்படம் முதலில் தீபாவளிக்கு வெளிவரும் என சொல்லப்பட்ட நிலையில், வெளியீட்டை பொங்கலுக்கு தள்ளி வைத்தார்கள்.
இப்போது, முன்னதாகவே வெளியிடுகிறார்கள். பொங்கலுக்கு, ‘கோச்சடையான, வீரம், ஜில்லா’ படங்கள் வெளிவர உள்ள நிலையில் பொங்கல் போட்டியிலிருந்து ‘பிரியாணி’ விலகிக் கொண்டிருக்கிறது.
ஏற்கெனவே, தீபாவளிக்கு ‘ஆரம்பம், பாண்டியநாடு’ படங்களுடன் சேர்ந்து வெளியாகி ‘அழகுராஜா’ ஆடிப் போன நிலையில் ‘பிரியாணி’யின் முன்கூட்டிய வெளியீடு ஆச்சரியப்பட வைத்தாலும், அதுதான் உண்மை நிலவரம்.
தொடர்ந்து மூன்று தோல்விப் படங்களைக் கொடுத்துள்ள நிலையில் ‘பிரியாணி’யாவது கார்த்திக்கு கை கொடுக்குமா என்று பார்ப்போம்.