தமிழில் ரீமேக் ஆகும் மலையாள ‘காக்டெயில்’…

adithi poojaமலையாளத்தில் அமோக வெற்றி பெற்ற ‘காக்டெயில்’ என்ற படம் தமிழில் “அதிதி ” என்ற பெயரில் ரீமேக் செய்யப்படுகிறது.

ஸ்பெல் பௌன்ட் பிலிம்ஸ் I N C என்ற பட நிறுவனம் தயாரிக்கும் இந்த படம் வித்தியாசமான காதல் மற்றும் குடும்ப சென்டிமென்ட் கதையாக உருவாகிறது.

நந்தா கதாநாயகனாக நடிக்கிறார். இன்னொரு நாயகனாக நிகேஷ்ராம் நடிக்கிறார். அனன்யா கதாநாயகியாக நடிக்கிறார்.

மற்ற நடிகர், நடிகைகள் தேர்வு நடிபெற்றுக் கொண்டிருக்கிறது.

திரைக்கதை , வசனம் எழுதி இயக்குகிறார் பரதன். இவர் விஜய் நடித்த  “அழகிய தமிழ் மகன்” படத்தின் இயக்குனர்.

தற்போது அஜீத் நடிக்கும் வீரம் படத்திற்கு வசனம் எழுதுகிறார்.

இப்படத்தின் துவக்க விழா சமீபத்தில் நடைபெற்றது.

படப்பிடிப்பு இம்மாதம் 18 ந் தேதி சென்னையில் துவங்கி தொடர்ந்து நடைபெறுகிறது.

ஒளிப்பதிவு   –  ஜெய்

இசை  – பரத்வாஜ்

பாடல்கள்   –   நா.முத்துகுமார் , பா.விஜய்

கலை  – கார்த்திக் ராஜ்குமார்

நடனம்  –  தினேஷ் , பாலகுமார் , ரேவதி

எடிட்டிங்   – பிரவீன் –  கே.எல்.ஸ்ரீகாந்த்

தயாரிப்பு நிர்வாகம்   – சிவா

தயாரிப்பு   –   ஸ்பெல் பௌன்ட் பிலிம்ஸ் – நிகேஷ்ராம்

Read Previous

‘டாப்’ ஹீரோக்களுன் நடிக்க வேண்டும் – ப்ரீத்தி தாஸ்

Read Next

திருக்குறளுக்கு இசையமைத்துள்ள பரத்வாஜ்…