அஜித்தின் ‘வீரம்’ படப்பிடிப்பு முடிவடைந்தது…

veeram 2911_00006அஜித், தமன்னா, சந்தானம், விதார்த், பாலா, ரமேஷ்கண்ணா, அப்புக்குட்டி, ‘நாடோடிகள்’ அபிநயா, சூஸா குமார் மற்றும் எண்ணற்ற நட்சத்திரங்கள் நடித்த ‘வீரம்’ படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது.

எண்ணற்ற நட்சத்திரங்கள் நடித்திருந்தாலும், படத்தை திட்டமிட்டபடி முடித்திருக்கிறார் இயக்குனர் சிவா.

அஜித்தின் அற்புதமான ஒத்துழைப்பாலும், மற்ற நடிகர்களின் துணையுடனும் இதை வெற்றிகரமாக செய்திருக்கிறார் இயக்குனர்.

பொங்கலுக்கு வெளிவர உள்ள ‘வீரம்’ படத்தின் இசை வெளியீடு விரைவில் நடக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. படத்தின் பின்னணி இசைக்கோர்ப்பு வேலைகள் ஏற்கெனவே ஆரம்பமாகிவிட்டன.

குறிப்பிட்ட நேரத்தில் , குறிப்பிட்ட பட்ஜெட்டில் படப்பிடிப்பை முடித்த இயக்குனர் சிவாவையும் , அவரது தொழில் நுட்பக் கலைஞர்களையும் மலர்ந்த முகத்தோடு பாராட்டினார்கள் தயாரிப்பாளர்கள்.

“அஜீத் அவர்களின் தொழில் பக்தியும் , நேர்மையும் மற்றவர்கள் இடையே பரவுவதே இந்த திட்டமிட்ட பயணத்துக்கு காரணம் என்று கூறி பொங்கலுக்கு ‘வீரம்’ நிச்சயம், என பெருமையுடன் கூறுகிறார்கள் தயாரிப்பாளர்கள் பாரதி ரெட்டி , வெங்கட்ராம ரெட்டி.

அடுத்தடுத்த அஜித்தின் பட வெளியீட்டால் அஜித் ரசிகர்கள் அதிக மகிழ்ச்சியுடன் உள்ளார்கள்.

Read Previous

பிரியாணி – ‘பிளேபாய்‘ ஆக நடித்துள்ள கார்த்தி

Read Next

எம்ஜிஆர், சிவாஜி-க்கு அடுத்து விஜய் சேதுபதியா ?