எந்த விதமான ‘பன்ச்’ வசனமோ, பாடல்களில் ‘ஹீரோயிசம்’ பேசும் வரிகளோ இல்லாத ஒரு விஜய் படத்தைப் பார்க்க தயாராகுங்கள் ரசிகர்களே…
ஆம்..‘ஜில்லா’ படத்தில்தான் இப்படியெல்லாம் நடக்க இருக்கிறது.
‘தலைவா’ படத்தின் தாறுமாறுக்குப் பிறகு எந்த தேவையற்ற பிரச்சனையும் வேண்டாமென விஜய் எடுத்த நல்ல முடிவுதான் இது என்கிறார்கள் விஷயம் அறிந்தவர்கள்.
‘ஜில்லா’ படத்தை எப்படியாவது மாபெரும் வெற்றிப் படமாக்கிட வேண்டும் என்பதில் கண்ணும் கருத்துமாக இருக்கிறாராம் விஜய். அவருடைய ‘சோலா’ பாட்டில் கூட எந்த புகழ்ச்சியும் இருக்கக் கூடாது என்று பாடலாசிரியருக்கு உத்தரவு போட்டார்களாம்.
இப்படியிருக்க இந்த ‘இன்டர்நெட்’ யுகத்திலும் நேற்று ஒரு சில நாளிதழ் பத்திரிகையாளர்களை மட்டும் அழைத்த விஜய், அனைவரிடமும் கனிவாகவும், பணிவாகவும் ஒரு வேண்டுகோள் வைத்தாராம்.
“தயவு செய்து ‘ஜில்லா’ படம் வெளியாகும் வரை என்னைப் பற்றி எந்த தேவையற்ற செய்தியையும் வெளியிட்டு படத்திற்கும் எனக்கும் கெட்ட பேரை ஏற்படுத்திக் கொடுத்து விடாதீர்கள்,” என்று கேட்டுக் கொண்டாராம்.
அதனால், இனி விஜய் பற்றிய எந்த ‘எதிர்மறையான’ செய்திகளையும் நாளிதழ்கள் வெளியிடப் போவதில்லையாம்.