100 கோடி படங்களின் நாயகி…

deepika-padukone2013ம் ஆண்டில் நான்கு 100 கோடி படங்களின் நாயகி என்ற பெருமையைப் பெற்றிருக்கிறார் தீபிகா படுகோனே.

இது இந்தியத் திரையுலகில் யாருக்கும் கிடைக்காத ஒன்றாகும்.

இந்த ஆண்டில் இவர் நடித்து முதலில் வெளிவந்த திரைப்படம் ‘ரேஸ் 2’. அனில் கபூர், சைப் அலிகான், ஜான் ஆபிரகாம் மற்றும் பலர் நடித்த இப்படத்தை அப்பாஸ் – முஸ்தான் இயக்கியிருந்தனர். இத்திரைப்படம் சுமார் 104 கோடி ரூபாய் வசூலித்துள்ளது.

அடுத்து இவர் நடித்த ‘ஹே ஜவானி ஹை கஹானி’ திரைப்படம் மே 31ம் தேதி வெளியானது. ரன்பீர் கபூர், ஆதித்ய ராய் கபூர், கல்கி கோச்லின் மற்றும் பலர் நடித்த இந்த படத்தை இயக்கியவர் அயன் முகர்ஜி. இத்திரைப்படம் சுமார் 190 கோடி ரூபாய் வசூலித்துள்ளது.

அடுத்து தீபிகா படுகோனே ஷாரூக்கானுடன் இணைந்து நடித்த ‘சென்னை எக்ஸ்பிரஸ்’ திரைப்படம் ஆகஸ்ட் 8ம் தேதியன்று வெளியானது. இத்திரைப்படம் 227 கோடி ரூபாய் வசூலித்துள்ளது.

அடுத்ததாக ரன்வீர் சிங்குடன் , தீபிகா ஜோடியாக நடித்த ‘ராம் லீலா’ திரைப்படம் நவம்பர் மாதம் 15ம் தேதி வெளியானது. இத்திரைப்படம் இதுவரை 101 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்துள்ளது.

ஒரே ஆண்டில் தீபிகா படுகோனே இந்த சாதனையைப் புரிந்ததன் மூலம் ஹிந்தித் திரையுலகில் வேறு எந்த நடிகையும் செய்யாத ஒரு சாதனையைச் செய்திருக்கிறார்.

தீபிகா , ரஜினிகாந்த்துடன் நடித்துள்ள ‘கோச்சடையான்’ திரைப்படம் அடுத்த ஆண்டு வெளிவர உள்ளது. இப்படமும் 100 கோடிக்கும் மேல் வசூலாகும் என்று இப்போதே எதிர்பார்க்கப்படுகிறது.

கோடிகளின் நாயகி….

Read Previous

‘கோச்சடையான்’ தாமதம், களத்தில் இறங்கிய ரஜினி…

Read Next

சூர்யாவுடன் நடந்தது என்ன ? – கௌதம் மேனன் விளக்கம்