ரஜினிகாந்த் நடித்துள்ள ‘கோச்சடையான்’ படமே எப்போது வரும் என்று தெரியாத நிலையில், கடந்த சில நாட்களாக ரஜினியின் அடுத்த படம் என்ன என்பதைப் பற்றிய வதந்தி பலவாறாக உலா வந்து கொண்டிருக்கிறது.
இயக்குனர் கே.எஸ். ரவிக்குமார்தான் ரஜினியின் அடுத்த படத்தை இயக்கப் போகிறார் என்றும், ஷங்கர், கே.வி.ஆனந்த் இருவரும் ரஜினியிடம் கதை சொல்லி ஓகே வாங்கி விட்டனர் என்றும் செய்திகள் பரவிய வண்ணம் உள்ளன.
ஆனால், நாம் விசாரித்த வரையில் ரஜினி தற்போது ‘கோச்சடையான்’ படத்தினை சீக்கிரம் வெளியிடும் முயற்சியில் மட்டுமே உள்ளதாகவும், அந்த படம் வெளிவந்த பின்தான் அடுத்த படத்தைப் பற்றிய அறிவிப்பை வெளியிட உள்ளார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதுவும் சரிதான், முதல்ல ‘கோச்சடையான்’ பத்தி சரியான தகவலை யாராச்சும் சொல்லுங்கப்பா…
ரஜினி ரசிகர்கள் காத்திட்டிருக்காங்க ….