‘வீரம்’ பாடல்கள் இணையதளங்களில் திருட்டுத்தனமாக வெளியானது…

ajith-in-veeramஜித், தமன்னா, சந்தானம் மற்றும் பலர் நடிக்க சிவா இயக்கத்தில் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்து பொங்கலுக்கு வெளிவர உள்ள ‘வீரம்’ படத்தின் பாடல்கள்  இணையதளங்களில் திருட்டுத்தனமாக நேற்று வெளியானது.

இப்படத்தின் இசை வெளியீடு நாளைதான் (20-12-2013) நடைபெற உள்ளது.

இப்படித்தான் இதற்கு முன் ‘பிரியாணி’ படத்தின் பாடல்களும் இணையதளங்களில் திருட்டுத்தனமாக வெளியானது.

இப்போது மீண்டும் ‘வீரம்’ படத்தின் பாடல்களும் வெளியானது திரையுலகினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

இப்படி பாடல்களை யார் திருடிக் கொடுக்கிறார்கள் என்பதை சம்பந்தப்பட்டவர்கள் உடனே கண்டுபிடித்து, இம்மாதிரியான திருட்டைத் தடுக்க வேண்டும் என பல தயாரிப்பாளர்கள் கருதுகிறார்கள்.

‘வீரம்’ படத்தின் அதிகாரபூர்வமான இசை வெளியீடு நாளை ‘ரேடியோ மிர்ச்சி’ எஃப் எம்-மில் நடைபெற உள்ளது.

காலை 8 மணி முதல் 11 மணி வரை இசை அமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத்தும் , இயக்குனர் சிவாவும் பாடல்கள் உருவான விதத்தை பற்றிய விவரங்களை பகிர்ந்து கொள்கின்றனர்.

அந்த சுவாரசியமான நிகழ்வுடன் ‘வீரம்’ படத்தின் பாடல்களைக் கேட்டு மகிழுங்கள்…

Read Previous

சித்தார்த், சமந்தாவை எதிர்க்கும் மகேஷ்பாபு ரசிகர்கள்…

Read Next

அதிகரித்து வரும் ஒரு வாரப் படங்கள்…