திருமணம் நடக்கவில்லை…நண்பர்கள்தான்… – வனிதா விஜயகுமார்

vanitha vijayakumar and robertநடிகர் விஜயகுமாரின் மகளான வனிதா விஜயகுமார், அவ்வப்போது செய்திகளில் இடம் பெறுவார்.

ஏதாவது திருமணச் செய்தி, சண்டை சச்சரவு, அல்லது குடும்பத் தகராறு என சில வருடங்கள் முன் வரை பல முறை செய்திகளில் இடம் பெற்றுக் கொண்டேயிருந்தார்.

சமீப காலமாகத்தான் அவரைப் பற்றி எந்த செய்தியும் வராமல் இருந்தது.

ஆனால், சில தினங்களுக்கு முன் சென்னையில் நடைபெற்ற ‘என்னமோ ஏதோ’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் டான்ஸ் மாஸ்டரான ராபர்ட்டுடன் இணைந்து வந்து பத்திரிகையாளர்களை ஆச்சரியப்பட வைத்தார்.

தொடர்ந்து அவர்களிருவரும் திருமணம் செய்து கொண்டாதாக செய்திகள் வெளியாகின.

ஆனால், இதை மறுக்கிறார் வனிதா விஜயகுமார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்

“எனக்கும் நடன இயக்குனர் ராபர்ட்டுக்கும் திருமணம் நடக்கவில்லை. நாங்கள் இருவரும் நண்பர்களாகத்தான் பழகி வருகிறோம். இது எங்கள் இருவரது குடும்பத்துக்கும் தெரியும். அவர்களுக்கும் மகிழ்ச்சிதான்.

இருவரும் இணைந்து தயாரிப்பு நிறுவனம் ஒன்றை ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளோம். விரைவில் அது தொடர்பான அறிவிப்பு வெளி வரும்.

நாங்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ளவும் முடிவெடுத்துள்ளோம், ஆனால் அது முறைப்படி நடக்கும்,” என்று அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

வனிதா விஜயகுமாருக்கு இதற்கு முன் இரண்டு முறை திருமணம் நடந்துள்ளது .

முதல் கணவர் ஆகாஷ், இரண்டாவது கணவர் ஆனந்த் ராஜன். ராபர்ட்டுக்கும் அவருக்கும் நடக்கவிருக்கும் திருமணம் மூன்றாவது திருமணமாகும்.

 

Read Previous

‘ஆஹா கல்யாணம்’ படத்தில் ‘பன்ச் பாடல்’…

Read Next

‘ஜில்லா’ 100 கோடியைத் தொட்டதா ?

Most Popular