‘ஜில்லா’ 100 கோடியைத் தொட்டதா ?

jilla 100 cr design‘ஜில்லா’ படம் 100 கோடி வியாபாரத்தை தொட்டிருப்பதாக ‘ஜில்லா’ படத்திற்கான அதிகாரபூர்வமான ட்விட்டர் கணக்கில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சில நிமிடங்களுக்கு முன் இதற்கான ஒரு டிசனையும் அவர்கள் வெளியிட்டிருக்கிறார்கள்.

அதில் “ஜில்லா திரைப்படம் 7 நாட்களுக்குள் 100 கோடி ரூபாய்” வியாபாரத்தை தொட்டிருப்பதாக  குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், அதில் ‘பாக்ஸ் ஆபீஸ், மற்ற வருவாய்” எனவும் குறிப்பிட்டிருக்கிறார்கள்.

உலகம் முழுவதும் திரையரங்குகளைப் பொறுத்தவரையில் படம் வெளியான 8 நாட்கள் வரையில் 30 முதல் 40 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக அதிகாரபூர்வமற்ற தகவல்கள் தெரிக்கின்றன. படத்தின் சாட்டிலைட் உரிமை 15 கோடி ரூபாய் வரை விற்கப்பட்டதாகவும் தெரிகிறது.

ஆக மொத்தம் 45 கோடி முதல் 55 கோடி வரை மட்டுமே வசூலித்துள்ள நிலையில் இந்த “100 கோடி கிளப்’ விளம்பர டிசைன் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட ஒன்றா அல்லது ரசிகர் செய்த டிசைனா என்பது தெரியவில்லை.

எப்படியோ விஜய் ரசிகர்களை குஷிப்படுத்த நன்றாக தெரிந்து வைத்திருக்கிறார்கள்.

Read Previous

திருமணம் நடக்கவில்லை…நண்பர்கள்தான்… – வனிதா விஜயகுமார்

Read Next

இன்று ‘இது கதிர்வேலன் காதல்’ இசை வெளியீடு…