விஜய் வசந்த் நடிக்கும் ‘ஜிகினா’…

jigina pooja newsராகுல் பிக்சர்ஸ் என்ற புதிய பட நிறுவனம் சார்பில் கேடிகே தயாரிக்கும் புதிய படம் ‘ஜிகினா’. இந்த படத்தை நந்தா பெரியசாமி இயக்க, புது இசையமைப்பாளர் ஜோன் இசையமைக்கிறார். விஜய் வசந்த், சானியா தாரா, சிங்கம் புலி, ‘கும்கி’ அஷ்வின், மற்றும் பலர் நடிக்கின்றனர்.

இவர்களோடு தற்போது தொலைக்காட்சியில் பிரபலகமாகி வளர்ந்து வரும் ஒருவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளாராம். இந்த படத்தை “ஒரு கல்லூரியின் கதை, மாத்தி யோசி, அழகன் அழகி” ஆகிய படங்ளுக்குப் பிறகு நந்தா பெரியசாமி  இயக்குகிறார். படத்தின் படப்பிடிப்பு ஜுலை 28ம் தேதியன்று ஆரம்பமானது.

இயக்குனர் லிங்குசாமி படத்தின் படப்பிடிப்பை தொடக்கி வைத்தார். படத்தின் பெயரைப் போலவே மிகவும் உற்சாகத்துடன் , பிரகாசத்துடன் துவங்கிய ‘ஜிகினா ‘ படத்தின் ஒவ்வொரு காட்சியும்  படத்தின் வெற்றிக்கு பக்க பலமாக இருக்கும்,”’ என்று நம்பிக்கையோடு கூறுகிறார் இயக்குனர் நந்தா பெரியசாமி.

தொடர்ந்து பல்வேறு இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்று இந்த வருட இறுதியில் ‘ஜிகினா’ திரைக்கு வருகிறது.

Read Previous

நம் கலாச்சாரத்தை நாம்தான் காப்பாற்ற வேண்டும் – மலேசிய தயாரிப்பாளர் பேச்சு

Read Next

சிவகார்த்திகேயன் பட டியூன்களை எடுத்துக் கொண்ட விஜய்…??