‘துப்பாக்கி’ வசூலை முறியடித்த ‘கத்தி’…

kaththi collection record newsதமிழ்நாட்டில் மட்டுமல்லாது, கேரளா, கர்நாடகா மற்றும் வெளிநாடுகளான அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், ஐரோப்பாவிலுள்ள சில நாடுகள், ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், மலேசியா, ஸ்ரீலங்கா, நியூசிலாந்து, கனடா, தென் ஆப்ரிக்கா, மொரிஷியஸ், துபாய், மத்திய கிழக்கு நாடுகள் என பல இடங்களிலும் வெளியான ‘கத்தி’ படத்திற்கு முதல் நாளிலிருந்தே நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறதாம்.

வெளிநாடுகளில் இந்தப் படத்தின் வசூல் கொஞ்சம் கொஞ்சமாக ‘எந்திரன்’ படத்தின் வசூலை நெருங்கிக் கொண்டிருக்கிறது என்றும் சொல்கிறார்கள். தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் விஜய் – ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியின் முந்தைய படமான ‘துப்பாக்கி’ படத்தின் வசூலை இந்தப் படம் ஒரு சில ஏரியாக்களில், ‘கத்தி’ படம் வெளியான ஒரு வாரத்திலேயே முறியடித்து விட்டதாக திரையரங்க வட்டாரங்களில் தெரிவிக்கிறார்கள்.

தமிழ் சினிமாவைப் பொறுத்தவரையில் இதுவரை அதிக பட்சமாக ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த், ஐஸ்வர்யா ராய் நடித்த ‘எந்திரன்’ படம்தான் வசூல் செய்திருக்கிறது. அந்த சாதனையை ரஜினிகாந்த்தே முறியடித்தால்தான் உண்டு என்கிறார்கள்.

ரஜினிகாந்த் நடித்துள்ள ‘லிங்கா’ படம் விரைவில் வெளிவர உள்ளது. அநேகமாக அந்தப் படம் பல சாதனைகளைப் புரிய வாய்ப்புள்ளதாக இப்போதே பேச்சு எழுந்துவிட்டது.

‘கத்தி’ படத்தின் வசூல் ‘எந்திரன்’ படத்தின் வசூலைத் தொட்டாலும் அல்லது முறியடித்தாலும் அதுவும் சில வாரங்கள் மட்டுமே சாதனையாக நீடிக்கும். அதற்குள் ரஜினிகாந்தின் ‘லிங்கா’ படம் அதையும் தாண்டி வசூலாகும் என ரஜினிகாந்த் ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.

Read Previous

‘காவியத் தலைவன்‘ இன்றைய ரசிகர்களையும் கவரும்… – வசந்தபாலன்

Read Next

விஜய் டிவி – ‘கல்யாணம் முதல் காதல் வரை’ புத்தம் புதிய தொடர்…