வெற்றிகரமாக ஓடும் படத்தை மோசமாக விமர்சிக்கும் மற்றொரு இயக்குனர்…

Thirudan Police_00004தமிழ் சினிமாவில் எப்படி டிஜிட்டல் வந்த பிறகு பலரும் படமெடுக்க வந்து விட்டார்களோ, அதே போல் இணையதளங்களின் வளர்ச்சி  அபரிமிதாக வளர்ந்த பிறகு விமர்சிப்பவர்களும் அதிகமாகி விட்டார்கள் என்று திரையுகினரே குற்றம் சாட்டி வருகின்றனர்.

ஆனால், இப்போதோ கண்ணாடி  வீட்டுக்குள் இருந்து கொண்டே கல் எறியும் சம்பவங்கள் நடக்க ஆரம்பித்துள்ளன. ‘அட்டகத்தி’ தினேஷ், ஐஸ்வர்யா மற்றும் பலர் நடித்து கடந்த வாரம் வெளிவந்த ‘திருடன் போலீஸ்’ படத்தை ‘ஆரோகணம், நெருங்கி வா முத்தமிடாதே’ போன்ற படங்களை இயக்கிய லட்சுமி ராமகிருஷ்ணன் அவருடைய டிவிட்டர் வலைத்தளத்தில் கடுமையாக விமர்சித்துள்ளார்.

அதோடு, “ஒரு படம் நல்லா இருக்கோ இல்லையோ, நான் பார்க்கிற படங்களைப் பத்தி கண்டிப்பா எழுதுவேன்.  120  ரூபாய் கொடுத்து படம் பார்க்கிற ஒரு பார்வையாளனா அது என்னோட உரிமை,” என்றும் தெரிவித்துள்ளார்.

‘திருடன் போலீஸ்’ படம் ரசிகர்களின் அமோக வரவேற்போடு வசூல் ரீதியாகவும் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. அப்படியிருக்க லட்சுமி ராமகிருஷ்ணன் அந்தப் படத்தைப் பற்றி மட்டும் விமர்சித்து எழுதியிருப்பது திரையுலகத்தினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

என்னம்மா…இப்படி…பண்றீங்களேம்மா…

 

Read Previous

மீண்டும் நடிக்க வந்தார் ஜோதிகா…

Read Next

தமனுக்கு கார் பரிசளித்த தியாகராஜன், பிரசாந்த்…