அறிமுக இயக்குனர் பிரம்மா .ஜி இயக்கத்தில் ஜே .எஸ்.கே பிலிம் கார்ப்பரேஷன் ஜே.சதீஷ் குமார் மற்றும் கிறிஸ்ட் பிக்சர்ஸ் சார்பில் கிறிஸ்டி தயாரித்துள்ள படம் ‘குற்றம் கடிதல்’.
ஜிம்பாப்வே திரைப்பட விழா, மும்பை திரைப்பட விழா ஆகியவற்றைத் தொடர்ந்து அடுத்ததாக பெங்களூருவில் நடைபெற உள்ள 7ஆவது சர்வதேச திரைப்பட விழாவில் கலந்து கொள்ளவும் இப்படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
“ஒவ்வொரு விடியலும் எங்களுக்கு நல்ல சேதி தந்து கொண்டு இருக்கிறது. இந்த சந்தோஷத்தை சொல்லில் அடக்க முடியாது. இப்படிப்பட்ட தரமான படங்கள் தயாரிக்கும் பணியை நான் இப்போது பயிற்சியாக மேற் கொண்டு , வழக்கமாகவே வைத்துக் கொள்வேன்’ என தயாரிப்பாளர்களில் ஒரவரான சதீஷ் குமார் தெரிவித்துள்ளார்.