‘கத்தி’ படத்திற்கு இசையமைத்ததன் மூலம் ஏ.ஆர்.முருகதாஸ், விஜய்யுடன் முதன் முறையாக இணைந்த அனிருத், அடுத்து முருகதாஸ் ஹிந்தியில் இயக்கவிருக்கும் படத்திற்கும் இசையமைக்க உள்ளாராம்.
தமிழில் சாந்தகுமார் இயக்கத்தில் 2011ம் ஆண்டு வெளிவந்து விமர்சகர்களின் பலத்த பாராட்டைப் பெற்ற ‘மௌன குரு’ படத்தைத்தான் ஏ.ஆர்.முருகதாஸ் ஹிந்தியில் ரீமேக் செய்கிறார்.
கதையில் சில மாற்றங்களைச் செய்து நாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் மாற்றி அமைக்கிறார்களாம். நாயகியாக ‘லிங்கா’ படத்தில் நடித்துள்ள ஹிந்தித் திரைப்பட நடிகை சோனாக்ஷி சின்ஹா நடிக்க உள்ளார்.
இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைக்கப் போகிறார். ‘கத்தி’ படத்தின் இசையமைப்பில் முருகதாஸை அனிருத் கவர்ந்துவிட்டதால், அவரது திறமை மீது நம்பிக்கை வைத்து ஏ.ஆர்.முருகதாஸ் இந்த வாய்ப்பை வழங்கியிருக்கிறார் என்கிறார்கள்.
தமிழில் சில படங்களுக்கு மட்டுமே இசையமைத்திருந்தாலும், குறுகிய காலத்தில் புகழ் பெற்ற அனிருத் இப்போது பாலிவுட்டிற்கும் செல்கிறார்.