E 5 என்டர்டெய்ன்மென்ட் மற்றும் இமேஜினரி மிஷன்ஸ் பட நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் படம் ‘அட்டி’.
நாயகனாக மா.கா.பா மற்றும் நாயகியாக அஸ்மிதா நடிக்க ராம்கி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ராஜேந்திரன், அருள்தாஸ், ராம்ஸ், அழகு, கலை, மிப்பு, தங்கதுரை, யோகி பாபு மற்றும் பலர் நடிக்கின்றனர்.
கதை, திரைக்கதை, வசனம் எழுதி விஜயபாஸ்கர் இயக்குகிறார்.
“இப்படம் முற்றிலும் நகைச்சுவையை மையமாகக் கொண்டு அனைத்து தரப்பினரையும் கவரும் விதமாக உருவாக்கப்பட்டுள்ளது. சென்னையைச் சுற்றியுள்ள பகுதிகளில் வாழும் இளைஞர்களின் வாழ்வியல் யதார்த்ததை மிகவும் சுவாரசியமாகக் கூறுகிறோம். மகாபா ஆனந்த் கானா பாடகராக இப்படத்தில் நடிக்கிறார்,” என இயக்குனர் தெரிவித்தார்.
தற்போது இறுதிக் கட்ட படப்பிடிப்பை நெருங்கியுள்ள ‘அட்டி’ படத்தின் முக்கிய சண்டைக்காட்சிகள் ஸ்டண்ட் மாஸ்டர் பவர் பாண்டியன் படமாக்கினார்.
இப்படத்திற்கு வெங்கடேஷ் அர்ஜுன் ஒளிப்பதிவு செய்ய, சுந்தர் சி.பாபு இசையமைக்கிறார். எடிட்டிங் – M.V.ராஜேஷ்குமார், நடனம் – சுரேஷ். Dr.J. ஜெயகிருஷ்ணன், ஆ.கார்த்திகேயன் இணைந்து இப்படத்தைத் தயாரிக்கின்றனர்.