எஸ்கே ஸ்டுடியோஸ் சார்பில் கே.என்.சம்பத் தயாரிப்பில் அதிக பொருட்செலவில் பிரம்மாண்டமாகத் தயாராகும் படம் ‘வலியவன்’.
ஜெய், சர்வானந்த், அஞ்சலி, அனன்யா நடித்த ‘எங்கேயும் எப்போதும்’, விக்ரம் பிரபு, சுரபி நடித்த ‘இவன் வேற மாதிரி’ போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய சரவணன் இப்படத்தை இயக்குகிறார்.
கதாநாயகனாக ஜெய், நாயகியாக ஆன்ட்ரியா நடிக்கின்றனர். இவர்களுடன் அழகம் பெருமாள், ‘பண்ணையாரும் பத்மினியும்’ பாலா மற்றும் பலர் நடிக்கின்றனர்.
மென்மையான காதலை மையமாகக் கொண்ட இத்திரைப்படம், அனைவரும் ரசிக்கும் வகையில் உருவாக்கப்பட்டு
இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு சென்னையில் துவங்கி தொடர்ந்து டெல்லியில் நடைபெற்றது. படத்தின் முக்கிய காட்சிகள் ஹரித்துவார் மற்றும் குளுமணாலியில் நடக்க உள்ளது.