இந்த பொங்கல்…விஜய் டிவி பொங்கல்…

vijay tv pongal movies 2014பொங்கலுக்கு இன்னும் சரியாக ஒரு வாரம் இருக்கும் நிலையில் விஜய் டிவி பொங்கல் தினத்தன்று ஒளிபரப்பாக உள்ள மூன்று புத்தம் புதிய படங்களைப் பற்றிய அறிவிப்பை வெளியிட்டு விட்டது.

பொங்கல் தினமான 15ம் தேதியன்று அடுத்தடுத்து திரைக்கு வந்து சில மாதங்களே ஆன மூன்று புத்தம் புதிய படங்களை ஒளிபரப்ப உள்ளது.

மூன்று திரைப்படங்களுமே கடந்த ஆண்டு வெளிவந்து வெற்றி பெற்ற படங்கள் என்பது குறிப்பிடத்தக்கது. “மெட்ராஸ், ஜிகர்தண்டா, சிகரம் தொடு” ஆகிய படங்கள் பொங்கலன்று இடைவிடாமல் ஒளிபரப்பாக உள்ளன.

‘மெட்ராஸ்’ திரைப்படத்தில் கார்த்தி, கேத்தரின் தெரேசா மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். பா.ரஞ்சித் இயக்கிய இந்தப் படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையைமத்துள்ளார்.

‘ஜிகர்தண்டா’ படத்தில் சித்தார்த், லட்சுமி மேனன், பாபி சிம்ஹா, கருணாகரன் மற்றும் பலர் நடித்துள்ளார்கள். கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ள இந்தப் படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

‘சிகரம் தொடு’ படத்தில் விக்ரம் பிரபு, மோனல் கஜ்ஜார், சத்யராஜ், சதீஷ் மற்றும் பலர் நடித்துள்ளார்கள். கௌரவ் இயக்கியுள்ள இந்தப் படத்திற்கு இமான் இசையமைத்துள்ளார்.

விஜய் டிவி சமீப காலமாக பல புத்தம் புதிய படங்களை விசேஷ நாட்களில் ஒளிபரப்பி வருகிறது. தற்போது பொங்கலுக்கும் மூன்று புதிய படங்களை ஒளிபரப்ப உள்ளது.

Read Previous

2015 – ல் முன்னணியில் நயன்தாரா…

Read Next

திருமணம் பற்றி த்ரிஷா திடீர் அறிவிப்பு…